தமிழக மீனவர்களை கொன்னுட்டு இங்க வந்து வியாபாரம் பண்ண முடியுமா?.. பிரதமருக்கு திருமுருகன் காந்தி எச்சரிக்கை..!

Author: Vignesh
12 ஆகஸ்ட் 2024, 4:52 மணி
Quick Share

தமிழக மீனவர்களை கொன்று விட்டு தமிழகத்தில் வியாபாரம் செய்து விட முடியாது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவிற்க்கு எச்சரிக்கை செய்கிறோம் என மதுரையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி

மதுரையில் உள்ள இலங்கை நாட்டை சேர்ந்த தொழில் அதிபருக்கு சொந்தமான தம்ரோ பர்னிச்சர் கடையை இழுத்து மூடும் போராட்டம் நடைபெற்றது, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் கொலை செய்யப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அண்ணா நகரில் உள்ள தம்ரோ பர்னிச்சர் கடை அருகே போராட்டம் நடைபெற்று, 850 இக்கும் மேற்பட்ட மீனவர்களை கொலை செய்த இலங்கை நாட்டின் மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என போராட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆதி தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜக்கையன் கூறுகையில் “இந்திய அரசின் நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்படும் போது இந்திய அரசு மவுனம் காக்கிறது, 850 மீனவர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவொரு மீனவருக்கும் இழப்பீடு வழங்கவில்லை, இலங்கை அரசு மீது ஒன்றிய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என கூறினார், பின்னர் மே பதினேழு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில் “சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் கூறுகிறார், வீடு வீட்டுக்கு தேசிய கொடியை ஏற்றினால் இலங்கை கடற்படையிடம் இருந்து ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை காப்பாற்றி விடுமா?, 2021 ல் குஜராத் மீனவர் கொலை செய்யப்பட்ட போது பாக்கிஸ்தான் தூதர் நேரில் அழைக்கப்பட்டு கண்டனம் பதிவு செய்யப்பட்டது

குஜராத் மீனவருக்கு ஒரு நீதி, தமிழக மீனவருக்கு ஒரு நீதியா?, மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்தினால் தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்கள் அப்புறப்படுத்தப்படும், தமிழகத்தில் 1 ட்ரில்லியன் பொருளாதார வாய்ப்புகள் உள்ளதால் தமிழ் மொழியை கற்று கொண்டு தமிழகத்தில் வியாபாரம் செய்யுங்கள் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே சில நாட்களுக்கு முன்னர் இலங்கை தொழில் அதிபர்களிடம் பேசி உள்ளார்.

தமிழக மீனவர்களை கொன்று விட்டு தமிழகத்தில் வியாபாரம் செய்து விட முடியாது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவிற்க்கு எச்சரிக்கை செய்கிறோம், சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் மீனவர் கொலைக்கு காரணமான இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்” என கூறினார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 87

    0

    0