62 வயது முதியவரை கடத்திய வழக்கு : அதிமுக பெண் பிரமுகர் உள்பட 8 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
22 January 2022, 10:09 am

திருப்பூர் : திருப்பூரில், தொழில் அதிபரை கடத்த முயன்ற வழக்கில் தொடர்புடைய மூன்று ரவுடிகள், அதிமுக பெண் பிரமுகர் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

திருப்பூர் தென்னம்பாளையம், வேலன் நகர், ஆர்.வி.ஈ லே அவுட் பகுதியை சேர்ந்த பாபு (62)இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் இடம் வாங்குவது தொடர்பாக உள்ள பிரச்சினையில், ரியல்எஸ்டேட் தொழில் செய்யும் அதிமுக. மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் செல்வி (47) என்பவரின் தூண்டுதலின் பேரில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் சந்திரபோஸ், ரவிக்குமார் மற்றும் கோபிநாத் உள்ளிட்ட நான்கு நபர்கள் நேற்று முன்தினம் பாபுவின் வீட்டிற்கு காரில் சென்று கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து கடத்த முயற்சித்தனர்.

இதனிடையே பாபுவின் மனைவி கூச்சலிடவும், வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் பிடிக்க முயற்சித்ததால், காரில் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பாபு அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அஜய் (22),விக்னேஷ் (25)பாபுவை கடத்த கூறிய ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் செல்வி (47) அருண்குமார் (39), பினிஷ்குமார்(43) ஆகியோர் சேர்த்து மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் சுபாஷ், ரவிக்குமார், கோபிநாத் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததுள்ளது.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!