திருப்பூரை அதிர வைத்த மதமாற்றம் சம்பவம்… அரசு பள்ளிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு.. உண்மை என்ன..? ஆட்சியர் பளிச்..!!

Author: Babu Lakshmanan
26 April 2022, 5:20 pm

திருப்பூர் : திருப்பூரில் அரசு பள்ளிகளில் மதமாற்றம் நடந்தது உண்மையா..? என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவலை ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியை ஆசிரியர் ஒருவர் மதமாற்ற முயற்சி செய்ததாக மாணவியின் பெற்றோர் மற்றும் இந்து முன்னணி சார்பில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆசிரியை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, இந்து இளைஞர் முன்னணி சார்பில் இரண்டு முறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு பள்ளிகளிலும் மதம் மாற்றம் தொடர்பான புகார் இல்லை எனவும், ஜெய்வாபாய் பள்ளியில் மதமாற்ற முயற்சித்ததாக வந்த புகாரில் உண்மையில்லை எனவும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைத்து இருப்பதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் ஏதேனும் பள்ளிகளில் இதுபோல் புகார்கள் இருந்தால் மாணவ மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!