காதல் பிரச்சனையில் 3 பேருக்கு கத்திக்குத்து… சண்டையை தடுக்க வந்தவருக்கு நேர்ந்த கதி… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
24 May 2022, 10:15 am

திருப்பூரில், காதல் பிரச்சனை காரணமாக பட்டபகலில் கத்தியுடன் துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் – ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். அதே பகுதியை சேர்ந்தவர் ஹரி. இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் செந்தில் என்பவர் காதலித்த பெண்ணை சக்திவேல் என்பவர் காதலித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சக்திவேலிடம் பேச செந்தில், ஹரி இருவரும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சக்திவேலின் தாயார் மட்டும் இருந்த சூழலில் செந்தில், ஹரி இருவரும் தாயாரை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவலறிந்து வந்த சக்திவேல், பனியன் துணியை வெட்டும் கத்தியை கொண்டு செந்தில், ஹரி இருவரையும் தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், அவ்வழியாக சென்ற ராஜ்குமார் என்பவரும் இதனை தடுக்க முயன்றுள்ளார். அப்போது செந்தில், ஹரி இருவரும் தப்பிய நிலையில் ராஜ்குமார் அவர்களிடத்தில் சிக்கி உள்ளார். அவரை துரத்தித் துரத்தி சகோதரர்கள் இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இவர்களின் தாயாரும் சேர்ந்து மிளகாய் பொடி தூவி தாக்கியுள்ளார்.

முதுகு, வயிறு என பல இடங்களில் கத்திக்குத்து வாங்கிய ராஜ்குமார் தப்பிக்க முயன்று, அங்கிருந்து ஓடி வந்து அருகில் இருந்த பைக் கன்சல்டிங் கடையில் தஞ்சம் புகுந்தார். விடாமல் துரத்திய சகோதரர்கள் கடைக்குள் புகுந்து ராஜ்குமாரை தாக்க முயன்றனர். ஆனால், கடை உரிமையாளர்கள் அவர்களை தடுத்து உடனடியாக கடை கதவுகளை மூடியதால் ராஜ்குமார் உயிர்தப்பினார்.

எனினும், விடாமல் கத்தியுடன் சகோதரர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை பேசி அனுப்பி வைத்துவிட்டு காயம்பட்ட இளைஞரை இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கடை உரிமையாளர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியுடன் பட்டப்பகலில் துரத்தித் துரத்தி இளைஞர்கள் தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1089

    0

    0