நண்பன் இறந்த விரக்தியில் பேருந்தில் விழுந்து முதியவர் தற்கொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
23 November 2022, 4:09 pm

திருப்பூர்: நண்பர் உயிரிழந்ததால் முதியவர் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (75) என்பவர் தனது நண்பருடன் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அவர் கடந்த வாரம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனால் சோகத்தில் இருந்த சுப்பிரமணி இன்று காலை நடைபயிற்சியின் போது திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 881

    0

    0