ஓட்டலில் தலைக்கேறிய போதையில் பஞ்சாயத்து தலைவர்… தூக்கிச் சென்ற சக கட்சி நிர்வாகிகள்..!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 10:02 pm

திருப்பூர் : ஓட்டலில் உணவருந்தச் சென்ற போது, போதை தலைக்கேறிய பஞ்சாயத்து தலைவரை, அவருடன் வந்தவர்கள் தூக்கிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல்லடத்தை அடுத்த மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அசோக் குமார். பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வரும் இவர், கடந்த 17ம் தேதி மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற கரையான்புதூரில் பா.ஜ.வின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மாதப்பூரில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்து அண்ணாமலை அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூட்டத்தை முடித்து கட்சி தொண்டர்களுடன் சென்ற மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார் பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர், உணவு கூட உட்கொள்ள முடியாதபடி இருந்துள்ளார். அப்போது, அவருடன் வந்தவர்கள் அவரை அல்லேக்காக தூக்கி சென்றுள்ளனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!