தொழில் போட்டியால் ரூ.5 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்… திடீரென கொள்ளையனுக்கு எழுந்த அச்சம்… விபரீத முடிவால் போலீசார் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 6:04 pm

திருப்பூர்: 5 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில், அடையாளம் தெரிந்ததால் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த கொள்ளையன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் சொர்ணபுரி அவென்யூ மகாலட்சுமி கார்டன் இரண்டாவது வீதி பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார் (54). இவரது மனைவி கவிதா (44). இவர்களுக்கு அஜய் பிரணவ் என்ற (14) மகன் உள்ளார். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிவக்குமார் பெருமாநல்லூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கணக்காளராக கடந்த நான்காண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தொழில் போட்டியில் ரூ.5 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்… திடீரென கொள்ளையனுக்கு எழுந்த அச்சம்...  விபரீத முடிவால் பரபரப்பு...!!

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட கான்ட்ராக்டர் ராகேஷ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் இணைந்து நிறுவன உரிமையாளர் ராஜசேகர் 100 வீடுகள் கட்டி விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்காக ராகேஷ் தனது பங்களிப்பாக 38 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, நிலம் வாங்கப்பட்டு சிவகுமாரின் மனைவி கவிதா பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், வீடு கட்டும் இடத்தை ராகேஷ் சென்று பார்த்த போது, அந்த இடம் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். இரு தரப்பிலும் பேசப்பட்டு 38 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர். பின்னர் நிலம் விற்பனையாகாதது மற்றும் பணம் இல்லை என தொடர்ந்து பணத்தை தராமல் அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது.

தொழில் போட்டியில் ரூ.5 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்… திடீரென கொள்ளையனுக்கு எழுந்த அச்சம்...  விபரீத முடிவால் பரபரப்பு...!!

இதனால் சிவகுமார் வேலை செய்யும் இடத்தில் பணியாற்றி வந்த பணியாளர்களை கடந்த ஜூலை மாதம் ராகேஷ் மிரட்டி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பினரையும் அழைத்து பேசிய போலீசார் 38 லட்சம் ரூபாயை ராகேஷுக்கு கொடுத்து பிரச்சனை முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

100 வீடுகள் கட்டப்பட்டு இருந்தால் தனக்கு 5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் அது கிடைக்காததால், தனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி ராகேஷ் சிவக்குமாரை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி கவிதா வீட்டில் இருந்த பொழுது, முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி இருவரையும் சேரில் கட்டிப் போட்டு உள்ளனர். வீட்டில் பணம் உள்ளதா என தேடிய போது, எதுவும் கிடைக்காத நிலையில், மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அஜய் ப்ரணவை கத்தி முனையில், பிடித்து 5 கோடி ரூபாயை கொடுத்து விட்டு மகனை மீட்டுக் கொள் என கடத்தி உள்ளனர்.

தொழில் போட்டியில் ரூ.5 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்… திடீரென கொள்ளையனுக்கு எழுந்த அச்சம்...  விபரீத முடிவால் பரபரப்பு...!!

அப்போது, அஜய் பிரணவ் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற போது ஒருவரின் முகமூடி விலகியுள்ளது. அதில் மகனை கடத்தி மிரட்டியது ராகேஷ் என்பது தெரியவந்தது . மாணவனை ராகேஷ் கடத்திச் சென்ற சிறிது நேரம் கழித்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிவக்குமார் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை கேரள மாநிலம் கொல்லம் தனியார் விடுதியில் மாணவனை கடத்திச் சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாணவன் நலமுடன் இருப்பதை அறிந்த போலீசார் மாணவனை மிக்க கேரளா விரைந்துள்ளனர்.

தொழில் போட்டியில் ரூ.5 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்… திடீரென கொள்ளையனுக்கு எழுந்த அச்சம்...  விபரீத முடிவால் பரபரப்பு...!!

விசாரணையில் ராகேஷ் அடையாளம் தெரிந்து விட்ட நிலையில், போலீசார் தன்னை பிடித்து விட கூடும் என்ற பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். மாணவனை தூக்கிட்டுக் கொள்ள வற்புறுத்தி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அப்பொழுது மாணவன் தூக்கிட்டுக் கொள்ளாமல் தப்பித்துள்ளார்.

கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் 5 கோடி ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்டு, பின்னர் கடத்திய நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 928

    0

    0