இன்ஸ்டாவில் பழக்கமானவருடன் குடித்தனம்… திடீரென மதமாறச் சொல்லி டார்ச்சர்… அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவதாக இளம்பெண் புகார்..!!

Author: Babu Lakshmanan
6 May 2022, 10:25 am

திருப்பூர் : இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபர் மதமாறச் சொல்லி, அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபருடன் இரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மதம் மாற்ற முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்.

திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர் கரூரை சேர்ந்த பவித்ரா (21) என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கி இரண்டு மாதங்கள் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பவித்ராவை மதம் மாற்ற வற்புறுத்தி வந்ததாகவும், மேலும் மது அருந்திவிட்டு தன்னை வற்புறுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

இதனால் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில், தனது மதத்திற்கு மாற வேண்டும் என மிரட்டி ஒன்றாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இமான் ஹமீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

  • Gautam Karthik name change அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu