தள்ளாடும் வயதிலும் தகாத உறவு… 64 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை : முதியவர் கைது.. விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
23 January 2023, 1:12 pm

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சானாபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டமநல்லூர் வடக்கு காலனியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (64). கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், கணவனை இழந்த இந்த மூதாட்டிக்கு மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அனைவருக்கும் திருமணமானதால் கணவனை இழந்த மூதாட்டி, கடந்த 10 வருடங்களாக தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூதாட்டி சுலோச்சனாவின் வீட்டிற்கு முதியவர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாகவும், இரவு நேரத்தில் மூதாட்டியின் வீட்டிலேயே தங்கி இருந்த அவர், மூதாட்டியின் வீட்டிற்கு இரவு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகாலை வெகு நேரமாகியும் மூதாட்டி வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வீட்டில் உள்ளே பார்க்கும்போது மூதாட்டி சுலோச்சனா மேலாடைகள் கழட்டப்பட்ட நிலையில், பல இடங்களில் வெட்டப்பட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிரிவேடு காவல் நிலைய போலீசாருக்கு கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு காவல் நிலைய போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வழக்கு பதிவு செய்த பாதிரிவேடு காவல் நிலைய போலீசார், மூதாட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா…? அல்லது வேறு ஏதாவது காரணமாக கொலை செய்யப்பட்டாரா..? என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு, கொலையாளியை தேடி வந்தனர்.

மூதாட்டி சுலோச்சனாவை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் பாதிரிவேடு போலீசார் ஏடூரை சேர்ந்த வீரய்யா என்பவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், மூதாட்டியுடன் கடந்த பத்து ஆண்டுகளாக வீரய்யா பழகி வந்த நிலையில், அவருடன் பேசாமல், சில தினங்களாக வேறொருவருடன் சுலோச்சனா பழகி வந்ததால் ஆத்திரமடைந்து, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முதியவரை சிறையில் அடைத்தனர்.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!