திரைப்படத்தை மிஞ்சிய மீஞ்சூர் சம்பவம்… ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக்கட்டப்பட்ட அதிமுக பிரமுகர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan17 May 2022, 1:58 pm
திருவள்ளூர் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சியில் அதிமுகவை சேர்ந்தவர் மனோகரன். இவர் 2-வது முறையாக கொண்டக்கரை ஊராட்சியின் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தமது மனைவி, குழந்தைகளுடன் காரில் தி்ரும்பி கொண்டிருந்த கொண்டிருந்தார்.
அப்போது, டிப்பர் லாரி மோதி அதில் இருந்த 10 பேர் மனோகரனை குடும்பத்தார் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த அந்த ஊராட்சி மக்கள், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரி-திருவற்றியூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் சென்ற கார் மீது நேருக்கு நேர் திட்டமிட்டு, டிப்பர் லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில் சாலையின் இடது புறமாக செல்லும் காரை, வலது புறமாக செல்லும் டிப்பர் லாரி மோதி விபத்தை ஏற்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதன் பின்பு மர்ம நபர்கள் மனோகரனை வெட்டி விட்டு தப்பினர்.
திரைப்படத்தை மிஞ்சும் அளவிலான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.