சென்னை – மாதவரம் அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ட்ராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து வாடகை காரை ஓட்டுநர் மெய்ஞானம் என்பவர் எடுத்து கொண்டு பயணிகளுடன் ஆந்திர மாநிலம் தடா நோக்கி சென்று கொண்டிருந்தார். மாதவரம் ரவுண்டானவை கடந்து செல்லும் போது, கார் பழுதடைந்தது போல இருந்ததால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி எஞ்சின் முன்பக்கத்தை திறக்க முற்பட்ட போது தீப்பற்றியுள்ளது.
இதனையடுத்து காரில் இருந்த பயணிகள் மூவர் கீழே இறங்கி, ஓட்டுநர் என 4 பேரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நண்பகல் உச்சி வெயிலில் கடும் அனல் காற்று வீச தொடங்கியுள்ள நிலையில், கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சசி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றிய நிலையில் 4 பேர் உடனடியாக ஓட்டம் பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
This website uses cookies.