பெண் காவலர் வீடு உள்பட பல இடங்களில் தொடர் கொள்ளை ; 3 பேர் கைது… 40 சவரன் தங்க நகைகள் பறிமுதல்..!!
Author: Babu Lakshmanan17 August 2022, 6:28 pm
சென்னை புழல் பகுதியில் பெண் காவலர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 40 சவரன் தங்க நகைககளை பறிமுதல் செய்தனர்.
புழல் அடுத்த லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பெருமாள் (54). இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். பெருமாள் தனது குடும்பத்தினருடன் கடந்த 9ம் தேதி அன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு, மதுரையில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார்.
கோவிலுக்கு சென்று விட்டு தேதி அன்று வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்ததில் பீரோவும் உடைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த நகைகள் 25 சவரன் மற்றும் 75 ஆயிரம் பணமும் திருடு போயிருந்தது.
இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட புழல் காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கொண்டு சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே, லட்சுமிபுரம் பகுதியில் பெண் காவலர் பரிமளம் என்பவர் வீட்டிலும், பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து, விசாரணை செய்த கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ராஜாராம் அவர்கள் உத்தரவின் பேரில், புழல் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஸ்ரீஜா ஆகியோர் தலைமையில் காவலர்கள் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, ரெட்டேரியில் பதுங்கி இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் தாங்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு குழந்தைவேலு, ஸ்டீபன், மணிகண்டன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 சவர தங்க கையை கைப்பற்றினர். அதன் பின் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0