உனக்காவது 3 மாசம்… எனக்கு ஒரு வருஷமா நிதியே வரல.. திமுக கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதியின் பேச்சுக்கு எம்எல்ஏ கலகல பதில்..!!

Author: Babu Lakshmanan
1 June 2022, 11:23 am

தன்னை விளம்பரத்துவதற்கு பதிலாக முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று திமுக எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலைஞர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன், பிறக்கும் குழந்தைக்கு ஜாதி பெயரை வைத்து எழுதும் மாநிலங்களுக்கு மத்தியில் தனிபெயராக எழுதி எல்லோறும் சமமாக வாழும் வகையில் திராவிடமாடல் ஆட்சி நடைபெறுவதாகவும், தன்னை நிகழ்ச்சியில் படம் எடுத்து தங்கமானவர் எங்கிட்ட மோதாதே என பாடல்களை போட்டு தன்னை புகழ்வதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய அவர், முதல்வரின் செயல்பாடுகளை இளைஞர்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், லியோனி பொன்னேரியில் திமுக கூட்டத்தில் பேசியதற்காக வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் நான்கு மாதங்கள் மட்டுமே முதல்வர், அமைச்சர்கள் மக்கள் பணியாற்றியதாகவும் மற்ற பிரச்சினைகளில் 8 மாதங்கள் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நிதி மூன்று மாதங்களாகியும் ஒதுக்கப்படவில்லை என கூட்டத்தில் தெரிவித்த போது, தனக்கே ஒரு ஆண்டாக சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கப்படவில்லை என நகைச்சுவையாக பேசி கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தினார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!