ஏரியில் மீன்பிடிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி : கைகலப்புக்கு தயாரான இருதரப்பினர்… அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!
Author: Babu Lakshmanan1 August 2022, 10:04 pm
திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, கோட்டை குப்பம், கூனங்குப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராம மக்களிடையே பழவேற்காடு ஏரியில் மீன், இறால், நண்டு பிடிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது.
இது தொடர்பாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் காவல்துறையினர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், இருதரப்பினரும் உடன்பாட்டிற்கு வராததால், தோல்வி அடைந்தது. இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், உஷாரான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு அனைவரையும் வெளியேற்றியனர். பின்னர், அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தனர்.