பூ வியாபாரியின் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை ; பெட்டிகளை ஆற்றங்கரையோரம் வீசிச் சென்ற திருடர்கள்… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
5 September 2022, 6:08 pm

திருவள்ளூர் அருகே பூ வியாபாரி வீட்டின் உள்ளே புகுந்து 30 சவரன் தங்க நகைகளை பீரோவில் இருந்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம் அருகே உள்ள பாலேஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் பூ வியாபாரி முனுசாமி. இவரது மனைவி உமாராணி மற்றும் மருமகன் மணிகண்டன் ஆகியோருடன் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை அங்கிருந்த சாவியைப் போட்டு திருடி சென்றனர்.

தூங்கி எழுந்து பார்த்தபோது நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பீரோவில் இருந்து நகைகளை திருடி விட்டு நகைகள் வைக்கப்பட்டிருந்த காலி பை மற்றும் நகை இருந்த காலி பெட்டிகளை ஆரணி ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் வீசி சென்று உள்ளனர்.

நகைகளை திருட வந்தவர்கள் மயக்க மருந்து அடித்து அவர்கள் மயக்கம் அடைந்த நிலையில், சாவி போட்டு பீரோவில் இருந்து நகைகளை திருடி சென்றனரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?