அதிகரித்து வரும் கஞ்சா கலாச்சாரம்… இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் ; இரு இளைஞர்கள் கைது… ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 5:17 pm

திருவள்ளூர் ; புழல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் சைக்கிள் ஷாப் அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய ஆட்டந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (25), குணா (23) இருவரை கைது செய்தனர்.’

அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு பின்னர் புழல் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 458

    0

    0