புழல் ஏரியில் 10ம் வகுப்பு மாணவியின் உடல் கண்டெடுப்பு : பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலைக்கு தள்ளப்பட்டாரா..? போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
23 August 2022, 7:05 pm

சென்னை புழல் ஏரியில் பத்தாம் வகுப்பு மாணவி உடல் மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புழல் காவங்கரை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் குமார் என்பவரது மகள் ஹரிப்ரியா (15). பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியான இவர், புழல் ஏரியில் உள்ள ஜோன்ஸ் டவர் அருகே உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியை ஹரிப்ரியவை காணவில்லை எனப் பெற்றோர் ஏற்கனவே புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் புழல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிர் இழந்த மாணவி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததை, பெற்றோர் கேட்டதால் புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா ? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி புழல் ஏரியில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?