கையை பிளேடால் அறுத்து தலைமை காவலர் தற்கொலை… விபரீத முடிவுக்கான காரணம் என்ன..? போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
13 August 2022, 12:36 pm

திருவள்ளூர் : மீஞ்சூரில் தலைமை காவலர் யுவராஜ் என்பவர் தன்னைத்தானே மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் வசித்து வந்தவர் யுவராஜ் (54). இவரது மனைவியின் பெயர் சாமுண்டீஸ்வரி. இவருக்கு ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் மகனும் உள்ளார். யுவராஜ் எண்ணூர் E4 காவல் நிலையத்தில் தலைமை காவலராக 1997 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. வீட்டில் இருந்த யுவராஜ் யாரும் இல்லாத நேரத்தில் தன் மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட இருந்துள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டார், இவரை அருகில் உள்ள மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று கூறி விட்டனர்.

இதனை அடுத்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்கு பதிந்து குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!