கடை எப்ப சார் திறப்பீங்க…. வடிவேலு பட பாணியில் பூட்டிய டாஸ்மாக் கடைக்குள் குடிமகன்கள்… சில மணிநேரத்தில் காத்திருந்த சம்பவம்..!!
Author: Babu Lakshmanan4 September 2022, 1:14 pm
திருவள்ளூர் அருகே வடிவேல் திரைப்பட காமெடி காட்சி போன்று சுவற்றில் துளை போட்டு அரசு டாஸ்மாக் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் இருவரை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டை தண்டலசேரி அருகேயுள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையின் சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்த இருவர் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணிக்கு சென்ற போலீசார், பதிவேடு கையெழுத்திட சென்றபோது மதுபான கடையை சுற்றிப் பார்த்துள்ளனர்.
அப்போது, மதுபான கடையின் சுவற்றின் துளைபோட்டு இருவர் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார், இருவரையும் கையும் களவுமாக சுவற்றின் வழியாக வெளியேற்றி பிடித்து கைது செய்தனர்.
பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த முனியன் ஆகிய இருவரை கைது செய்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான கடையில் கொள்ளை அடிக்க வந்த இருவரும் குடித்துவிட்டு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.