பேட்டரி திருடியதாக இளைஞர் கைதான வழக்கில் திடீர் திருப்பம்… வழிப்பறி செய்ததில் ரிவேஞ்சுக்கு நடந்த கொலை அம்பலம்..!!

Author: Babu Lakshmanan
12 October 2022, 12:47 pm

திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டியில் பேட்டரி திருடனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் அப்பலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரின் விவசாய டிராக்டரிலிருந்து பேட்டரியை மர்ம நபர்கள் தேடிச் சென்றனர். இது குறித்து அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சோழியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்யா (19) என்பவரை கைது செய்தனர்.

thiruvallur murder - updatenews360

மேலும், பேட்டரி திருட்டில் ஈடுபட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த திருப்பாலைவனம் பகுதியை சேர்ந்த கெல்லீஸ் என்கிற விஜி (20) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன் அவன், திட்டமிட்டு ஒருவரை கொலை செய்தது தெரியவந்தது .

thiruvallur murder - updatenews360

பேட்டரி திருடன் விஜியை தாக்கி, வழிபறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவனை ஒரு மாதத்திற்கு முன், அவனுக்கு அடையாளம் தெரிந்துள்ளது. அந்த நபரை திட்டமிட்டு, எளாவூர் அழைத்து சென்று, அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளான். போதை ஏறியதும், சுவற்றில் தலையை அடித்து மயக்கமடைய செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

thiruvallur murder - updatenews360

இதையடுத்து, விஜியை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.
ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையின் பின்புறம், முட்புதரில் அழுகிய நிலையில் சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார் என்பது விஜிக்கு தெரியாத நிலையில், கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேட்டரி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் திடீர் திருப்பமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது .

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 476

    0

    0