வல்லூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு.. தடைபடுகிறதா மின்விநியோகம்…?

Author: Babu Lakshmanan
11 May 2022, 1:54 pm

திருவள்ளூர் : வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில் 2வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் தினமும் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2-வது அலகில் மின்னியல் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 மற்றும் 3-வது அலகில் தலா 500 வீதம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இரண்டாவது அலகில் ஏற்பட்டுள்ள மின்னியல் தொழில்நுட்ப கோளாறினை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 980

    0

    0