குடிபோதையில் அலப்பறை… தடுப்புவேலிகளை பைக்கில் மோதி கீழே விழுந்த அகில பாரத இந்து மகா சபை நிர்வாகி..!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 4:14 pm

இரவில் குடிபோதையில் காவல்துறை தடுப்பு வேலிகளை இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி கீழே விழுந்த அகில பாரத இந்து மகா சபை மாவட்ட தலைவரின் அட்ராசிட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை அகில பாரத இந்து மகா சபா மாவட்ட தலைவராக ஆர்.ஜி.வாசுதேவன் உள்ளார். நேற்று நள்ளிரவு திருவண்ணாமலை கோபுர தெருவில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை முழு போதையில் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி தலைக்குப்பர குடி போதையில் கீழே விழுந்துள்ளார்.

மேலும், அதே தெருவில் அண்ணாமலையார் கோயில் தெற்கு வாசல் பகுதிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த காவல் துறையினரின் தடுப்பு வேலியை முழு போதையில் கீழே தள்ள முயலும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, இவர் அடுத்த மாதம் மதுரையில் அகில பாரத இந்து மகா சபா நடத்தும் ஒன்பதாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் தலைமையேற்று கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

https://player.vimeo.com/video/855675354?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

முழு போதையில் வாசுதேவன் செய்த அட்ராசிட்டி சம்பவ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

  • rajinikanth to be act in lyca productions again நான் இருக்கேன், Don’t worry- லைகாவுக்கு மீண்டும் கைக்கொடுக்கும் ரஜினிகாந்த்?
  • Close menu