“மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்”- திருவாரூரில் பரபரப்பு!

Author:
28 June 2024, 1:10 pm

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு!

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர் .இங்கு மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் 15 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பள்ளியில் உள்ள சத்துணவு கூட்டத்தில் அரிசி,பருப்பு,முட்டை போன்றவை காலாவதி ஆகி விட்டதா? என்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதிய உணவு சாப்பிட்டதில் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா ? என்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 226

    0

    0