திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வகுப்பறை பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம். திருவாரூரில் அமைந்துள்ள இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி.
இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தற்போது, இந்த பள்ளியில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் உள்ள ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் அந்தந்த வகுப்பு பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்பட்டு அடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபொழுது, வகுப்பறை மாற்றம் காரணமாக வகுப்பறை பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. விரைவாக தமிழ் மொழியிலும் வகுப்பறை பெயர்கள் எழுதப்படும், என தெரிவித்தார். தமிழ் மொழியை நாங்கள் புறக்கணிக்கவில்லை என தெரிவித்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
This website uses cookies.