குழந்தை திருமணம் செய்து வைத்ததால் விரக்தி… விஷம் குடித்து மாணவி தற்கொலை : குடும்பத்தினர் மீது பாய்ந்த போக்சோ..!!

Author: Babu Lakshmanan
9 February 2022, 6:59 pm

திருவாரூர் : கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்ததால், குடும்பத்தினர் மீது விரக்தியடைந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை, கடந்த 2017 ஆம் ஆண்டு விழுப்புரம் ஆண்டிகுப்பத்தை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு மாணவியின் சித்தப்பா ஏழுமலை ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து திருமணம் முடிந்து மூன்று நாட்களில் மாணவி சொந்த ஊர் திரும்பி வந்துவிட்டார்.

இந்நிலையில் மாணவியின் குடும்பத்தார் வரதட்சணையை சிவகுமார் குடும்பத்தாரிடம் திருப்பி கேட்ட நிலையில் இதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மாணவி கடந்த 4ஆம் தேதி அன்று குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் குடித்து விட்டு வைத்திருந்த மீதமுள்ள விஷம் கலந்த குளிர் பானத்தை விஷம் கலந்தது அறியாமல் மாணவியின் தங்கையும் கொடுத்து விட்டதால் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உடனடியாக மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். தற்பொழுது மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனையடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் காவல் நிலையத்தில் மாணவியின் சித்தப்பா ஏழுமலை மட்டும் மாணவியின் பெற்றோர், சிவகுமாரின் பெற்றோர் உள்ளிட்டோர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போஸ்கோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகுமார் விழுப்புரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். எஞ்சிய 5 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தை திருமணத்தால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளது திருக்கரவாசல் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1173

    0

    0