“என்னை கேட்க நீ யார்..?” நடுரோட்டில் கத்தியோடு இளைஞர் அலப்பறை… வீட்டுக்கு போகச் சொன்ன போலீசார் மீது கத்தியால் தாக்குதல்..!!
Author: Babu Lakshmanan30 June 2022, 10:19 am
திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே காவலர் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரித்துவார் மங்கலம் கடைத்தெரு பகுதியில் கத்தியை வைத்துக்கொண்டு அலம்பல் செய்த 24 வயது உடைய சூரியா என்ற வாலிபர் குறித்து பொதுமக்கள் அரித்துவார் மங்கலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்டு அங்கு வந்த காவலர் மணிகண்டன் சூர்யாவை வீட்டுக்குப் போகும்படி கூறியுள்ளார்.
அப்போது, “என்னை கேட்க நீ யார்..?” என்று தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து உள்ளார் சூர்யா. பின்னர், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காவலர் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.