இது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி.. பாஜக எம்எல்ஏ சூசகம்!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2025, 5:07 pm
திருநெல்வேலியில் திருப்பரங்குன்றம் மலைமீது போராட்டத்திற்கு சென்றவர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள மண்டபங்களில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சென்று கைதானவர்களை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: சாலையில் 30 தோட்டாக்களுடன் கிடந்த ஏகே 47.. இளைஞருக்கு குவியும் பாராட்டு!
பின் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் திருப்பரங்குன்றம் மலை எங்களுக்கு சொந்தம் எனச் சொல்லி மாமிசம் சாப்பிடுவது, ஆட்டை கழுத்தில் போட்டுக்கொண்டும் பேட்டி கொடுத்தனர்.
பாஜக இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் மலைக்கு நாங்களும் சென்று சாமி கும்பிட்டு வந்தோம். இது அரசியல்வாதி செய்யக்கூடிய வேலை அல்ல இராமநாதபுரம் மணப்பாறை பகுதிகளில் உள்ள அனைத்து மக்களின் வாக்குகளை வாங்கி விட்டு ஒரு சாராருக்கு எதிராக பெரும்பான்மை மக்களுக்கு எதிராக பேட்டி கொடுப்பது தவறு எனவும் நான் உட்பட அரசியல்வாதிகள் யாரும் இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது என தெரிவித்திருந்தோம்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்து முன்னணி பாஜக தலைவர்களை வீட்டு சிறையில் காவல்துறை வைத்துவிட்டது.ஆனால் 400 ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்த வெள்ளைக்காரன் காலத்தில் கூட இப்படி ஒரு நிலை நடந்தது கிடையாது.
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என சொல்வோம். ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்.வாக்குக்காக பெரும்பான்மை மக்களை இம்சை செய்யும் அரசாக தமிழக அரசு செயல் பட்டு வருகிறது.
இந்த மாதிரியான செயல் ஆட்சி மாற்றத்திற்கு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.அம்பாசமுத்திரத்தில் இருந்து ரயிலில் திருப்பரங்குன்றம் சென்றவர்களை எல்லாம் காவல்துறை கைது செய்துள்ளது காவி வேட்டி கட்டினாலே கோவிலுக்கு போன மக்களை கைது செய்துள்ளனர் பெரும்பான்மை மக்களின் சம்பிரதாயமாக காவி வேட்டி பச்சை வேட்டி கட்டுவது சம்பிரதாயமாக உள்ளது.
இப்படி ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை வருவதற்கான காரணம் தெரியவில்லை.மிகப் பெரிய மாற்றத்தை மக்கள் நினைக்கிறார்கள்.ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அனுமதி கொடுத்திருந்தால் கோஷம் போட்டுவிட்டு கலைந்து சென்று இருப்பார்கள்.
தமிழக முழுவதும் கைது செய்து வைத்திருப்பது மக்களிடம் மன கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இறைவன் இதற்கு நல்ல ஒரு தீர்ப்பை தருவார்.
ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த விவகாரத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட்டு திருப்பரங்குன்றம் மலை முருகக்கடவுளுக்கு சொந்தம் என உள்ளது.சென்னை உயர் நீதிமன்றமும் அதனை உறுதி செய்துள்ளது.
மீண்டும் அதில் சர்ச்சையை கிளப்பி ஆட்சி மாற்றத்திற்கான வேலையை அவர்களே செய்வதாக தான் நினைக்கிறோம்.அரசு திருப்பணி செய்வதை மறுக்கவில்லை.
எல்லோரது ஆட்சி காலத்திலும் திருப்பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.யாராலும் திருப்பணி செய்வதை தடுத்து விட முடியாது யார் முதலமைச்சராக வந்தாலும் திருப்பணிகள் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும்.
அதனை நாங்கள் குறை சொல்லவில்லை. முதலமைச்சர் ட்விட்டரில் பதிவு செய்த வாசகம் படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதை பிரதிபலிப்பதை போல் உள்ளது.யாரை திருப்தி படுத்த இந்த வேலை செய்கிறார்கள் என்பது தான் எனது கேள்வியாக உள்ளது.