100 ஆண்டுகால தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவே முதன்முறை : சபாநாயகருக்கு துபாஷியாக பெண் நியமனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 10:48 pm

100 ஆண்டு கால சட்டப்பேரவை வரலாற்றில் சபாநாயகருக்கு மொழிப்பெயர்க்க ஏதுவாக முதல்முறையாக பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆங்கிலேய ஆட்சியர்கள் உருவாக்கிய பல்வேறு நிர்வாக அமைப்புகளில் சட்டப்பேரவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1919ம் ஆண்டு இயற்றப்பட்ட அதிகாரப் பகிர்வு சட்டத்தின்படி உருவான சென்னை மாகாண சட்டப்பேரவையின் நீட்சியே தற்போதைய தமிழக சட்டப்பேரவை ஆகும்.

இந்தியா சுதந்திரமடைந்த பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், சில நிர்வாக நடவடிக்கைகளில் ஆங்கிலேயர் வகுத்த சில நிர்வாக நடைமுறைகள் தொடர்கின்றன.

1922ம் ஆண்டில் வெலிங்டன் பிரபு அன்பளிப்பாக கொடுத்த நாற்காலியில், பெருங்காவூர் ராஜகோபாலச்சாரி முதல் தற்போதை சபாநாயகர் அப்பாவு வரை அமர்ந்து அவையை வழி நடத்துகின்றனர்.

அவர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட துபாஷிக்கள் தனி சீருடையுடன் உள்ளனர். நூறாண்டுகளாக ஆண்கள் மட்டுமே இந்த பணியில் தற்போது ராஜலட்சுமி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1900ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமிக்கு தற்போது 60 வயது. வரும் மே மாதம் ஓய்வு பெறும் வரை இந்த பணியில் ராஜலட்சுமி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 1227

    0

    0