இதனால்தான் பொன்னியின் செல்வன் படத்தை வைரமுத்துவுக்கு கொடுக்கல.. படம் வெளியான நிலையில் உண்மையை உடைத்த மணிரத்னம்..!

Author: Vignesh
30 September 2022, 12:09 pm

இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.விக்ரம் த்ரிஷா ஐஸ்வர்யா ராய் கார்த்தி ஜெயம்ரவி பார்த்தீபன் சரத்குமார் பிரபு ஜெயராம் விக்ரம் பிரபு ஐஸ்ர்ய லட்சுமி எக ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் இப்படத்தில் கவிஞர் வைரமுத்து பணியாற்றாமல் போனதற்கு ரகுமானின் சகோதரி தான் காரணம் என பலர் தெரிவத்து வருகின்றனர் பயில்லான் கூட அண்மையில் இது குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் இது குறித்து இயக்குநர் மணிரத்னத்திடம் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.அப்போது மணிரத்னம் “வைரமுத்துவோடு ஏற்கனவே பல படங்களில் பணியாற்றிவிட்டோம். அவரின் பல கவிதைகளை ரஹ்மானோடு இணைந்து பாடல்கள் ஆக்கியுள்ளோம். அவை எல்லாமே ஹிட் ஆகின.

புதிய திறமையாளர்களோடு ஒரு படம் பண்ணலாம் என்றுதான் இந்த முடிவு” எனக் கூறி இருந்தார்.இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் மீண்டும் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “வைரமுத்துவோடு பணியாற்றினாலும் மற்ற கவிஞர்களோடு பணியாற்றினாலும் ஒரே அளவு உழைப்பைதான் போடுகிறோம். நிறைய திறமையான தமிழ்க் கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு பணியாற்றுவது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 478

    0

    0