இதென்னடா பிரியாணி கடைக்கு வந்த சோதனை… பிரபல SS ஐதராபாத் கடைக்கு சீல்!!
Author: Udayachandran RadhaKrishnan21 September 2024, 7:24 pm
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செயல்பட்டு வந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் கடந்த சில தினங்களாக பிரியாணி உணவு சாப்பிட்ட சிலருக்கு மயக்கம் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை உணவு பாதுகாப்புத்துறை பொறுப்பு அதிகாரி டாக்டர் சதீஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பொன்னேரி நகராட்சி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்கு கோழி இறைச்சி உள்ளிட்ட பலவேறு உணவுகள் கெட்டுப் போகியும் முறையாக வேக வைக்கப்படாமலும் இருந்ததை எடுத்து குப்பையில் கொட்டி உணவு சமைப்பவர்கள் மற்றும் உணவகம் நடத்துபவர்களிடம் வாடிக்கையாளர்களுக்கு தரமாக உணவு வழங்க வேண்டும்.
p> மேலும் படிக்க: சொந்த அத்தையிடமே அத்துமீறல்.. கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : சரணடைந்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்!
கெட்டுப்போன உணவுகளை வழங்க கூடாது என எச்சரிக்கை செய்து பின்னர் தற்காலிகமாக கடையை மூடி சீல் வைத்தனர் மேலும் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத வகையில் அனைத்து உணவு பொருட்களையும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். கடையை மூடி சீல் வைத்து அறிவிப்பு நோட்டீசை கடையின் முன்பாக ஒட்டி சென்றனர்.