என் பெயர் ஸ்டாலின் என வைக்க இதுதான் காரணம் : திருமண விழாவில் முதலமைச்சர் கூறிய குட்டிக் கதை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 1:36 pm

சென்னை : தனது பெயரை ஸ்டாலின் என கலைஞர் வைத்ததற்கு இதுவே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் பேசிய அவர், உங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்.
கலைஞர் கருணாநிதியை பொறுத்தவரையில், எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ் பெயரை தான் சூட்டியுள்ளார். என்னுடைய பெயர் மட்டும் தான் வித்தியாசமாக இருக்கும். அதுவும் எனக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் காரணப்பெயர்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் கம்யூனிசம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எனவே, ரஷ்யாவில் ஸ்டாலின் அவர்கள் இறந்த நேரம் நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார்.

எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டுவதற்கு முன்னதாக, பெரியார் மற்றும் அண்ணாவின் பெயரை சேர்த்து அய்யாதுரை என்று தான் பெயர் சூட்ட திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 7226

    0

    0