இதற்காகத்தான் விலகி இருந்தேன்.. காரணம் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. எதற்கு தெரியுமா.?
Author: Rajesh19 April 2022, 12:44 pm
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் 2004ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

தற்போது இந்த ஜோடி 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்துள்ளார்கள், ஆனால் என்ன காரணம் என்ன என்பததை இதுவரை அவர்கள் தெரிவிக்கவேயில்ல. ஆனால் இருவரும் கண்டிப்பாக சேர்ந்துவிடுவார்கள், அவர்களது மகன்கள் எப்படியாவது சேர்த்து வைத்துவிடுவார்கள் என்ற நிறைய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதற்காக அறிகுறிகள் எதவும் தெரியாத நிலை தான் இன்றுவரை தெரிகிறது.
பிரிவுக்கு பிறகு இருவரும் அவர்கள் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா ஆக்டீவாக சினிமாவில் பணியாற்ற தொடங்கியுள்ளார். விரைவில் ஒரு இசை ஆல்பம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா கொடுத்த ஒரு பேட்டியில், நான் சினிமாவில் இருந்து 7 வருடம் தள்ளி இருக்க காரணம் எனது மகன்கள் தான். அவர்களுடன் இருக்க வேண்டிய நேரம் என்பதால் சினிமாவில் இருந்து வலகி இருந்தேன் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.