“ஒரு மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்”-வெறியை தீர்த்துக் கொண்ட தெரு நாய்!

Author:
28 June 2024, 9:38 am
Quick Share

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்,நந்தினி தம்பதியினர். இதில் சக்திவேல் மாலத்தீவில் பணிபுரிந்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தையை வீட்டிற்குள் தூங்க வைத்துவிட்டு நந்தினி வீட்டில் பின்புறம் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறியது. குழந்தையின் அழுகுரல் கேட்டு சென்று பார்த்தபோது குழந்தையை தெரு நாய் கடித்து குதறி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி மற்றும் அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டி விட்டு குழந்தையை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் குழந்தையை நாய் கடித்து தான் இறந்ததா அல்லது வேறு காரணமா என்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 83

0

0

Leave a Reply