ஆபத்தான முறையில் வீலிங் செய்த புள்ளிங்கோ… வைரலான வீடியோவால் வந்த சிக்கல் ; வீடியோ தேடிச் சென்ற போலீசார்..!!!

Author: Babu Lakshmanan
13 November 2023, 2:51 pm

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது – இருசக்கர வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீச் ரோட்டில் ஒருவர் பைக்கில் சாகசம் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று தென்பாகம் காவல் நிலைய போலீசார் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துதல் மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் பிரவீன் ராஜ் (19) என்பவர் மேற்படி சம்பவ இடத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் எதிரி பிரவீன்ராஜை கைது செய்து சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.

https://player.vimeo.com/video/883899729?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?