மூட்டை மூட்டையாக கஞ்சா.. வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 9:53 am

தூத்துக்குடியில் 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடார சட்டமன்ற தொகுக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநர் ஆண்டி செல்வம் வாகனத்தை ஒட்டி வந்தார்.

சோதனையின் போது அடுக்கடுக்காக மூட்டை இருப்பதை சோதனை செய்ததில் அதில் 450 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக க்யூ பிரிவு போலீசார், அந்த மூட்டையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர், ஓட்டுநர் ஆண்டி செல்வத்தை உடனடியாக கைது செய்த போலீசார், வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா? என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 1 கோடியே 30 லட்சம் என தெரிய வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ