ஆபாச படம் காட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… 55 வயது கார் ஓட்டுநர் போக்சோவில் கைது..!!!
Author: Babu Lakshmanan14 March 2024, 10:36 am
திருச்செந்தூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கார் டிரைவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை முத்துராஜ் (55). இவர் டிரைவராக இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே உள்ள 3-ம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமியின் வீட்டில் ஆளில்லாத போது, சிறுமி வீட்டிற்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து செல்போனில் ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கார் டிரைவரான முத்துராஜ் (55). கைது செய்து சிறையில் அடைத்தனர்.