திமுக எம்பி ஆ.ராசா மீது போலீஸில் புகார்… குற்ற நடவடிக்கை எடுக்க அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 4:57 pm

திமுக எம்பி ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக எம்பி ஆ.ராசாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூரில் இது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி, கழக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை வழிகாட்டுதலின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டனிஸ் பிரபு தலைமையில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆ. ராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர் பேசியதை பதிவேற்றம் செய்த யூடியூப் சேனல்களில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன்படி யூடியூப்பில் இருந்து அந்த வீடியோவை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!