அதிமுக செயலாளருக்கு அரிவாள் வெட்டு.. தூத்துக்குடியில் தடியங்காயால் பிரச்னையா?

Author: Hariharasudhan
4 December 2024, 6:52 pm

தூத்துக்குடியில் அதிமுக செயலாளரை தகராறில் அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து, வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பி அண்ட் டி காலனியைச் சேர்ந்தவர் தனராஜ் (40). இவர் 36வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆவார். அது மட்டுமல்லாமல், தூத்துக்குடி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு, உறவினரான ஆல்வின் ஜோயல் மற்றும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்து உள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்த சித்திரை பிச்சமுத்து (28) என்பவர், ரோட்டில் உடைத்து கிடந்த தடியங்காயால் வழக்கி விழுந்து உள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி விட வந்து உள்ளனர். அப்போது, சாலையில் தடியங்காய் உடைத்து என்னை கீழே விழ வைத்தது நீங்கள் தானே எனக் கூறி அவர்களிடம் பிச்சமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

Thoothukudi AIADMK worker attacked

அப்போது அவர் ஆல்வின் ஜோயலின் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனராஜ், சித்திரை பிச்சமுத்துவை தாக்கி உள்ளார். இதையடுத்து சித்திரை பிச்சமுத்து, தான் வைத்திருந்த அரிவாளால் தனராஜை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவரது வலது கை மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அமரன் ஓடிடி ரிலீஸுக்கு சிக்கல்.. பொறியியல் மாணவரின் மனுவால் பரபரப்பு!

இதனையடுத்து, அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ரு உள்ளனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து சிப்காட் காவல் ஆய்வாளர் சைரஸ் வழக்குப் பதிவு செய்து, சித்திரை பிச்சமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • Vishal-Suchitra viral video நைட் டைம் என் வீட்டிற்கு வந்து என்ன பண்ணாருன்னு தெரியுமா…விஷாலை பகிரங்கமா தாக்கிய பாடகி சுசித்ரா..!
  • Views: - 230

    0

    0