சாம்பார் சாதத்தில் அரணை… அம்மா உணவகத்தில் அலட்சியம்… முறையாக பராமரிக்க கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
16 September 2023, 4:54 pm

தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் அரணை கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நோயாளிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கில் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அவர்கள் மாநகராட்சி முன்பு அமைந்துள்ள தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம் முன்பு உள்ள அம்மா உணவகத்தில் தங்கள் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

அவ்வாறு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியைச் சார்ந்த சண்முகம் மகன் சரவணன் LIC ஏஜென்ட் ஆன இவர், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் காண்பித்து விட்டு மருத்துவமனை முன்பு உள்ள அம்மா உணவகத்தில் சென்று நான்கு பார்சல் சாம்பார் சாதம் வாங்கியுள்ளார்.

அதை ஒன்றைப் பிரித்து சாப்பிட்டவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சாம்பார் சாதத்தில் அரணை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அது குறித்து மீண்டும் அம்மா உணவகம் வந்து பார்த்தபொழுது, அவர்கள் அம்மா உணவகத்தை மூடிவிட்டு சென்றதால் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து தான் சிறிது சாப்பிட்டு உள்ளதால் இதில் விஷம் உள்ளதா என தெரியவில்லை என்றும், பார்க்காமல் சாப்பிட்டு இருந்தால் தனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 476

    0

    0