‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’… திருடிய பைக்கை தேவாலய வாசலில் விட்டுச் சென்ற திருடன் ; வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
17 November 2023, 7:47 pm

தூத்துக்குடி ; இருசக்கர வாகனத்தை திருடிய நபரின் சிசிடிவி காட்சி, வாட்ஸ்ஆப்பில் பரவிய நிலையில் திருடிய பைக்கை தேவாலய வாசல் முன்பு திருடன் நிறுத்திவிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் பிரிட்டோ என்பவர் நேற்று தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு சென்றார்.

அப்போது, செல்லும் வழியில், பிரிட்டோவின் உடன் பிறந்த சகோதரர் ராஜா என்பவர் திருடனை பார்த்து பைக்கை நிறுத்த கூறியும் நிறுத்தாமல் அவர் வேகமாக பறந்து சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பரவி இந்த திருடனை, ‘எங்காவது கண்டால் பிடியுங்கள்,’ என பைக்கை தொலைத்த பிரிட்டோ மற்றும் அவரது நண்பர்கள் வாட்ஸ் அப்பில் பரப்பினர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை பைக்கை திருடிய திருடன் “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பழமொழிக்கு ஏற்ப வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடி சென்ற திருடன் சாத்தான்குளத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் முன்பு திருடிய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

https://player.vimeo.com/video/885656265?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

இதனை அறிந்த பிரிட்டோ மற்றும் அவரது நண்பர்கள் பைக் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவரது இருசக்கர வாகனத்தை மீட்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 391

    0

    0