தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அண்ணாமலை… பாஜக – தேவர் பேரவையினர் இடையே தள்ளுமுள்ளு : தூத்துக்குடியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 2:25 pm

தூத்துக்குடி 3வது மைலில் முத்தராமலிங்க தேவர் சிலை முன்பு பாஜகவினர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேரவையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட சக்தி கேந்திர ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக, 3வது மைல் பகுதியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பொழுது, அவரை வரவேற்க பசும் பொன் முத்துராமலிங்க தேவர் பேரவை தலைவர் இசக்கிராஜா தலைமையில் வரவேற்பு அளித்தனர்.

மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் வந்தவர்கள் பசும் பொன் முத்துராமலிங்க தேவர் பேரவை தலைவர் இசக்கிராஜாவை, பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன். பாலகணபதி தள்ளியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்களை பாஜக நிர்வாகிகள் சமாதானம் செய்ததை தொடர்ந்து முத்தராமலிங்க தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து சென்றார்.

தொடர்ந்து மாநகரில் அம்பேத்கார், பெரியார் உட்பட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்தார்.

  • Case Against MGR எம்ஜிஆர் மீது வழக்கு தொடுத்து ஜெயித்தவர் என் அப்பா… பிரபல நடிகர் ஓபன் டாக்!
  • Views: - 801

    0

    0