தாறுமாறாக ஓட்டிய தற்காலிக ஓட்டுநர்… பள்ளத்தில் சரிந்து அரசுப் பேருந்து விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

Author: Babu Lakshmanan
10 January 2024, 2:46 pm

கோவில்பட்டி அருகே தற்காலிக ஓட்டுநர் அரசு பேருந்தை சாலையோர பள்ளத்தில் விட்டு விபத்து பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி இயக்கப்படும் பேருந்துகள் விபத்தில் சிக்குவதும், நடுவழியில் நின்று கொள்வதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.இதனால், பொதுமக்கள் ஒருவித பீதியுடனேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி – கோவில்பட்டி அருகே தற்காலிக ஓட்டுநரால் இயங்கி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் இருந்து பேரி லோவன் பட்டி வழியாக கோவில்பட்டி நோக்கி வந்த அரசு பேருந்தை ஒட்டி வந்த தற்காலியை ஓட்டுனர் சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பள்ளி கல்லூரி சென்றவர்கள் மற்றும் வேலைக்கு சென்றவர்கள் உயிர்த்தப்பினர். நன்கு அனுபவமுள்ள ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இருக்கும் கூட்டங்களில் இதுபோன்று அசம்பாவீதம் நடந்தால் யார் பொறுப்பு..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 592

    0

    0