வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. ரூ.36 லட்சத்தை சுருட்டிய நைஜீரியா நபர் ; நம்பி மோசம் போன தொழிலதிபர்!!

Author: Babu Lakshmanan
2 January 2023, 4:55 pm

தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தை whats app மூலம் ஏமாற்றி 36,98,800 பணத்தை சுருட்டிய நைஜீரியா நாட்டை சேர்ந்த நபரை கைது செய்தனர்.

தூத்துக்குடி, ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பணிமய காட்வின் மனோஜ் (38), இவர் தூத்துக்குடியில், கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், தூத்துக்குடி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், வாட்ஸ் அப் மூலம் டோகோவில் இருக்கும் வெடிஸ் அனிமல் ஹெல்த் இண்டஸ்ட்ரி (vetis Animal Health industry) என்ற நிறுவனத்திற்கு மருந்து ஏற்றமதி செய்ய இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சர்மா எண்டர்பிரைசஸ் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணா இண்டஸ்ட்ரீயில் இருந்து பெற்று வெட்டிஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யுமாறு கேட்டதை நம்பி மொத்தம் 36 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

இது குறித்து, தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த இசி பெடலிஸ் நுடுபுசி (Ese fidelis ndubuisi) என்பவர் வாட்ஸ் அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்து போலியான whatsapp எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படையினர் 29.12.2022-ம் தேதி மும்பையில் உள்ள உள்வே நோட் என்ற பகுதியில் நைஜீரிய நாட்டை சேர்ந்த அவரை வீட்டில் கைது செய்தனர்.

பின்னர், சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவர் பல நபர்களை ஏமாற்றியுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 433

    0

    0