நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட கார்… சுக்குநூறானதில் மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் பலி..!!

Author: Babu Lakshmanan
9 April 2024, 10:07 pm

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வள்ளியூர் தனியார் மருத்துவமனை மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சுகம் மருத்துவமனை மருத்துவர்கள் Dr.ரவீந்திரன் (50). இவரது மனைவி Dr. ரமனி (45). இருவரும் காலை அவர்களது உறவினர் சேர்மதாய் (70) ஆகிய மூவரும் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க: அன்று ஆங்கிலேயர்கள்.. இன்று பாஜக… . நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் இது ; கனிமொழி பிரச்சாரம்..!!

காரை ரவீந்திரன் ஒட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கார் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ரவிந்திரன், உட்பட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?