தூத்துக்குடி – கோவை வந்த தனியார் ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து : ஓட்டுநரின் சமயோஜித புத்தி.. எலும்புக்கூடான பேருந்து!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 9:16 am

தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து; தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து 8மணி அளவில் கோயம்புத்தூரை நோக்கி எஸ் பி எஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

பெருந்தை காயாமொழி குமாரசாமி புரம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட் பகுதியை இரவு 10 மணி அளவில் தாண்டி சென்று கொண்டிருந்தது.

அப்போது மின் கசிவு காரணமாக பேருந்தில் இருந்து தீப்பொறி வந்துள்ளது. இதை அடுத்து டிரைவர் ஓரமாக நிறுத்தி பார்த்த பொழுது, தீ மளமளவென பரவ தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பயணிகள் அனைவரையும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.


மேலும் பேருந்து முழுவதும் பற்றி எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையானது. தீ விபத்து குறித்து சிப்காட் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 687

    0

    0