பிரதமருக்கு கருப்புக்கொடி… தூத்துக்குடி மாவட்ட காங்., தலைவர் கைது ; போராட்டம் நடத்தியவர்களும் கைது செய்த போலீசார்…!!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 9:37 am

தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி வருகை தரும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று ஏற்கனவே மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் வீட்டிற்கு முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனார்.

காலை 6 மணிக்கு அவர் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக வெளியே வருகை தந்த போது, வீட்டிற்கு முன்பு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் உள்பட காவல்துறையினர் இருந்தனர்.

அப்போது, வெளியே வந்து முரளிதரன் என்ன சார்..? எதற்காக இவ்வளவு காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறீர்கள்..? என்று கேட்டபோது, உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் கைது செய்வதற்கு எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே உங்களை நாங்கள் கைது செய்கிறோம் என்று சொல்லி, நீங்கள் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். உடனே மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சியினர் உடனே வீட்டிற்கு முன்பு திரண்டு வந்து மாவட்ட தலைவரை விடுதலை செய்ய வேண்டும். மத்திய மோடி அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது. மீனவ மக்களை காக்க தவறிய மோடி திரும்பப் போ என்று கோஷமிட்டார்கள்.

பின்னர் காவல் துறையினர் அவர்களையும் கைது செய்து தூத்துக்குடி தனியார் மண்டபத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். மோடி நிகழ்ச்சி முடிந்து தூத்துக்குடியை விட்டு புறப்பட்டு சென்ற பின்பு உங்களை நாங்கள் விடுதலை செய்வோம் என்று அறிவித்திருக்கின்றார்கள்.

கைது செய்த போது, மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, மாவட்ட செயலாளர் கோபால், மாவட்டத் துணைத் தலைவர்கள், விஜயராஜ், ஜெயஜோதி, மாவட்ட பொது செயலாளர் சாந்தி மேரி, இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ராகுல், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாவட்ட மீனவர்கள் பிரிவு தலைவர் மைக்கில், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பேரையா, அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர் உள்பட பலர் கைதாகினர்.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 250

    0

    0