தந்தையை கல்லால் தாக்கி கொன்ற மகன்… மது குடிக்கப் பணம் தராததால் வெறிச்செயல் ; குடியால் சீரழிந்து போன குடும்பம்…!!

Author: Babu Lakshmanan
13 November 2023, 4:12 pm

தூத்துக்குடி அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை கல்லால் தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள மாங்கொட்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவன் மகன் பண்டாரம் (69), விவசாயி. இவருக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரே மகன் வேல்முருகன் (25) என்பவருக்கு திருமணமாகவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு பண்டாரம் மாங்கொட்டாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, வேல்முருகன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர் கருங்கல்லை தந்தையின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து ஏரல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப் பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் .

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?