குமரி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அர்பணிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாடகைக்கு எடுத்து ஸ்டிக்கர் ஒட்டி நிர்வாகிகள் நடத்திய விளம்பர நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது.
வடகிழக்கு பருவ மழையின் போது தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லை தூத்துகுடி மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளானது.பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நடிகர் விஜய் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் மத்திய மாவட்ட தலைவர் சபின் சார்பில் நிவாரண பொருட்களும் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனமும் வழங்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் சேவையை.புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார் தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ் அந்த பகுதியில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்கிய நிலையில் மாயமானது இது குறித்து நெல்லை தூத்துக்குடி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்ட போது முறையான தகவல் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அர்பணிக்கப்பட அதே பதிவெண் கொண்ட ஆம்புலன்ஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் காருண்யா ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மற்ற நிர்வாகிகள் விசாரணையில் இறங்கிய போது அந்த ஆம்புலன்ஸ் ஐ குமரி மத்திய மாவட்ட தலைவர் சபின் தொண்டர் கிருஷ்ணகுமார் என்பவர் மூலம் சுனில் என்பவரிடம் வாடகைக்கு எடுத்து வந்து தளபதி விஜய் மக்கள் இயக்கம் என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரத்திற்காக நெல்லை தூத்துக்குடி மக்கள் சேவைக்கு அர்பணிப்பது போல புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடங்கி வைத்து நாடகமாடியதும்.
அந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவர் ஆம்புலன்ஸை இது போல் இயக்கங்களுக்கு விளம்பரத்திற்காக ஸ்டிக்கர்களை மாற்றி ஒட்டி ஆம்புலன்ஸ் ஐ இயக்கி வந்ததும் தெரியவந்த நிலையில் நாடக சம்பவம் குறித்து நிர்வாகிகள் தலைமைக்கு புகாரும் அனுப்பி உள்ள நிலையில் இது சம்பந்தமான உரையாடல் ஆடியோவும் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆம்புலன்ஸ் விளம்பர நாடகம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.