வரத்து குறைவால் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை… கனகாம்பரம் 3 மடங்கு விலை உயர்வு… அலைமோதும் மக்கள் கூட்டம்!!

Author: Babu Lakshmanan
11 November 2023, 4:38 pm

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மலர்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தாலும், பூக்களை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு மலர்சந்தையில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு மலர்சந்தையில் நேற்று வரை 500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த கனகாம்பரம் வரத்து குறைவால் மூன்று மடங்கு உயர்ந்து 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், 600க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ கிலோ 1200 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்களும் கிலோ 1200 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ கிலோ 200 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது, 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஸ் கிலோ 150 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவு காரணமாக அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்துவரும் நிலையிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடியில் காய்கறி மார்கெட்டில் பரவலாக மக்கள் பொருட்கள் வாங்கி சென்றனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!