எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்… ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

Author: Babu Lakshmanan
22 October 2022, 1:22 pm
Quick Share

கோவில்பட்டி : தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்பட்டி ஆட்டுச்சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் மிகவும் முக்கியமான சந்தை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, சென்னை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம்.

goat market - updatenews360

வழக்கமாக வாரம் தோறும் 2 கோடி ரூபாய் வரையிலும், பண்டிகை காலங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், எட்டயபுரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை களைகட்டியது. நாளை மறுநாள் தீபாவளி என்பதால் விற்பனைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

goat market - updatenews360

விலையும் கடந்த வாரங்களை விட சற்று குறைவாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். 7 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை ஆடுகள் எடைக்கு ஏற்ப இளம் ஆடுகள் அதிகளவில் இறைச்சிக்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

goat market - updatenews360

கடந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் 6 கோடிரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 7கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 506

    1

    0